பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2013,01:13 IST
கருத்தை பதிவு செய்ய
மதுரை:நாடு தழுவிய அளவில் ஒட்டு மொத்த ராஜினாமா செய்ய
கலால் வரி கண்காணிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.பணிக்காலத்தில் நான்கு
பதவி உயர்வு வழங்குவது உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
மதுரையில் கலால் வரி கண்காணிப்பாளர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த கலால் வரி தினத்தையும்
புறக்கணித்தனர். சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த், ""கோரிக்கைகளை
வலியுறுத்தி மார்ச் 1ல் மதிய உணவு இடைவெளி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அடுத்த கட்டமாக, ஏப்., 30ல் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது. கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்,''
என்றார்.